Sunday, 11 September 2016

'ஹார்ட் அட்டாக்'

யாருக்கு 'அட்டாக்' வரும் ?

* டென்ஷன், கட்டுப்பாடில்லாத உணவு, அளவுக்கு அதிகமான மது பழக்கம், புகை பழக்கம் உள்ளவர்களுக்கு ஹார்ட் அட்டாக் வர அதிக வாய்ப்பு உள்ளது. இன்றைய சூழலில், வயது வித்தியாசமின்றி 13 வயது முதலே ஹார்ட் அட்டாக் வருகிறது.

* உடலில் ரத்த நாளாங்களில் சேரும் கொழுப்புகள் நாளடைவில் ரத்தக்குழாயை அடைத்து, ரத்த ஓட்டத்தை தடை செய்துவிடுவதால் அட்டாக் வருகிறது. சர்க்கரை நோய், ரத்த அழுத்தம், சிறுநீரகக் கோளாறு, அதிக குடிப்பழக்கம், புகைப்பழக்கம், உடல் பருமன் மற்றும் உடல் உழைப்பு இல்லாமல் இருப்பவர்களை இந்நோய் தாக்கும்.

* மேலும், துரித உணவு வகைகள், மாமிச உணவுகளை அதிகம் சாப்பிடுபவர்களுக்கு எளிதில் ஹார்ட் அட்டாக் வரலாம். குடும்பத்தில் யாருக்காவது இந்த பாதிப்பு இருந்தாலும், வருவதற்கான வாயப்புகள் உள்ளதால் ஜாக்கிரதையாக இருப்பது நல்லது.

* புகைபிடிக்கும் போது, ரத்தத்தின் உறையும் தன்மை அதிகரித்து, கெட்ட கொழுப்பை உருவாக்குகிறது. மது அருந்தும் போது, ஆல்கஹால் கெட்ட கொழுப்புச் சத்தை அதிகரிக்கும். மதுவோடு மட்டன், சிக்கனை சுவைக்கும் போது, விரைவில் ஹார்ட் அட்டாக் ஏற்படும்.

நோய் தாக்குதல் அறிகுறிகள் :

* நம்முடைய மார்புப் பகுதியை பலமாக அழுத்துவது போன்ற கடுமையான வலி ஏற்படும். அதிக வியர்வை மற்றும் மயக்கம் வருவதுபோன்று இருக்கும். இப்படி ஏதேனும் அறிகுறிகள் தென்பட்டால், அது மாரடைப்பின் அறிகுறியாக இருக்கலாம்.
* 20 நிமிடங்களுக்குள் இந்த அறிகுறிகள் நின்றுவிட்டால், அது 'மைனர்' ஹார்ட் அட்டாக்.
* 20 நிமிடங்களுக்கு மேல் நீடித்தால் அது 'சிவியர்' ஹார்ட் அட்டாக். இதில் எந்த வகையாக இருந்தாலும், உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்குச் செல்வது நல்லது.

முதலுதவி கிசிச்சைகள் :

* ஹார்ட் அட்டாக் வந்தவர்களில் 100க்கு 10 பேரை காப்பாற்றுவது கடினம். வலி தானே, பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று அலட்சியம் செய்யக்கூடாது. மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும்போதே பாதிக்கப்பட்டவருக்கு ஆஸ்பிரின் மாத்திரையைக் கொடுக்க வேண்டும். இந்த மாத்திரை ரத்தம் உறைதலைத் தடுப்பதுடன், உறைந்த ரத்தத்தை சரிசெய்யும். அடுத்து, உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளிக்க வேண்டும்.

* எனவே, எவ்வளவு சீக்கிரம் மருத்துவமனைக்குக் கொண்டு சென்று சிகிச்சைபெற நடவடிக்கை எடுக்கிறோமோ, அந்த அளவுக்கு, உயிரை காப்பாற்ற முடியும்.

நோய் வராமல் தடுக்க :

* நோய் வந்த பின் சிகிச்சை பெறுவது ஒருபுறம் இருந்தாலும், உடற்பயிற்சி மற்றும் உணவு கட்டுப்பாடு முக்கியம். காய்கறிகள், பழங்கள் அதிகம் சாப்பிட வேண்டும். கடைகளில் விற்கும் நொறுக்குத் தீனிகள் கண்டதையும் வாங்கி சாப்பிடக் கூடாது. அசைவ உணவை அளவோடு சாப்பிட வேண்டும், குறிப்பாக, மீன் உணவை எடுத்துக்கொண்டால் நல்லது. கொழுப்பு சத்துள்ள உணவை குறைக்க வேண்டும்.
* எப்போதும் 'ரிலாக்ஸ்' ஆக இருப்பதாலும், முறையான உணவுப் பழக்கம், தினமும் உடற்பயிற்சி செய்வதன் மூலம், ஹார்ட் அட்டாகில் இருந்து நாம் தப்பிக்கலாம். 

- டாக்டர் ஆனந்தராஜ்

பக்கவாதம் வராமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்ன ?

பக்கவாதம் வராமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்ன ?

சர்க்கரை அளவு, உயர் ரத்த அழுத்தத்தையும் கட்டுப்படுத்த வேண்டும். புகை, மது பழக்கத்தைக் கைவிடவேண்டும். கொழுப்பு சத்தைக் கட்டுப்படுத்துதல், தினமும் உடற்பயிற்சி செய்தல், மன அழுத்தம் வராமல் பணிகளை 
எளிமைப்படுத்துதல் அவசியம்.பழம், கீரையை உணவில் அதிகம் சேர்க்க வேண்டும். ஆண்டுக்கு ஒரு முறையாவது ரத்த அழுத்தம், சர்க்கரை, கொழுப்பு, உப்பு பரிசோதனை செய்து கொள்வது அவசியம். அலட்சியமாக இருந்தால், பக்கவாதம் பாதித்து குடும்பத்திற்கும், சமுதாயத்திற்கும் சுமையாகி விடுவோம். அத்தகைய நிலை வராமல் பாதுகாப்பது நம் கையில்தான் உள்ளது.

நரம்பியல் நிபுணர் கே.பானு

பக்கவாத அறிகுறி இருந்தால் என்ன செய்ய வேண்டும் ? மூன்று மணி நேரம் 'பொன்னான நேரம்' என்கிறார்களே ஏன் ?

பக்கவாத அறிகுறி இருந்தால் என்ன செய்ய வேண்டும் ? மூன்று மணி நேரம் 'பொன்னான நேரம்' 
என்கிறார்களே ஏன் ?

அறிகுறிகள் தெரிந்த மூன்று மணி நேரத்திற்குள், 'சிடி' ஸ்கேன் எடுக்கும் வசதி உள்ள மருத்துவமனைக்கு பாதிக்கப்
பட்டோரை அழைத்துச் செல்ல வேண்டும். மூளை அடைப்பை உறுதி செய்ய வேண்டும். மூன்று மணி நேரத்திற்குள், ரத்த அடைப்பு நீக்கும் மருந்து (Thrombolitic therapy) செலுத்தினால்,  முற்றிலும் குணப்படுத்த முடியும்.
தாமதமாக வந்தால், மருந்து போட்டாலும் பயனில்லை; பக்க விளைவுகள் ஏற்படவும் வாய்ப்புள்ளது. எனவே தான், அந்த மூன்று மணி நேரத்தை, 'பொன்னான நேரம்' என்கிறோம்.

நரம்பியல் நிபுணர் கே.பானு

பக்கவாதம் எந்த வயதினரை பாதிக்கும். இறப்பு விகிதம் அதிகமாக உள்ளதா ?

பக்கவாதம் எந்த வயதினரை பாதிக்கும். இறப்பு விகிதம் அதிகமாக உள்ளதா ?

உலகில், ஆறு நிமிடத்தில் ஒருவருக்கு பக்கவாதம் வருகிறது; நிமிடத்திற்கு, 10 பேர் இறக்கின்றனர். இந்தியாவில், ஒரு லட்சம் பேரில், 222 பேருக்கு, பக்கவாத பாதிப்பு உள்ளது. ஆண்டுக்கு, 16 லட்சம் பேர், இந்த நோயால் பாதிக்கப்படுகின்றனர். 40 வயதுக்கு மேற்பட்டோருக்கு, 12 சதவீத பாதிப்பு ஏற்படுகிறது. பக்கவாதம் வந்த, நான்கு வாரங்களில், 18 முதல் 41 சதவீதம் பேர் இறக்கின்றனர்.

நரம்பியல் நிபுணர் கே.பானு

பக்கவாதத்தை வரும் முன் அறிய முடியுமா ?

பக்கவாதத்தை வரும் முன் அறிய முடியுமா ?

பக்கவாதம் வரும் முன், உடலின் ஒரு பகுதி அல்லது முகம், கை, கால்கள் மரத்துப் போகுதல்; செயல் இழந்து போகுதல் போன்ற உணர்வு, திடீரென பார்வை மங்குதல், திடீரென தலை சுற்றல், திடீர் குழப்பம், பேச்சு குழறுதல், பிறர் பேசுவதை புரிய முடியாமை,  திடீரென கடும் தலைவலி, தான் எங்கு இருக்கிறோம் என்ற உணர்வு இல்லாதிருத்தல் போன்ற அறிகுறிகள் தோன்றும். அப்போதே, உஷாராகி விடுவது நல்லது.

- நரம்பியல் நிபுணர் கே.பானு

பக்கவாத பாதிப்புக்கான முக்கிய காரணங்கள் என்ன ? பாரம்பரிய நோயா ?

பக்கவாத பாதிப்புக்கான முக்கிய காரணங்கள் என்ன ? பாரம்பரிய நோயா ?

உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், இதய நோய்கள், ரத்தக்குழாய்களில் கொழுப்பு படிதல், அதிக உடல் எடை, பருமன் கூடுதல், புகை, மது பழக்கம், ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கம், சோம்பேறியான வாழ்க்கை முறை, நாட்பட்ட மன அழுத்தம், உடற்பயிற்சி இன்மை மற்றும் நாட்பட்ட தொற்றாலும், பக்கவாதம் வரலாம்.பாரம்பரியமாகவும் இந்த பாதிப்பு வருகிறது. 80 சதவீத பக்கவாதம், மூளை ரத்தக்குழாய்கள் அடைப்பாலும், 20 சதவீத பக்கவாதம், மூளையில் ரத்தம் கசித்து தேங்குவதாலும் ஏற்படுகிறது.

நரம்பியல் நிபுணர் கே.பானு

பக்கவாதத்தில் வகைகள் உண்டா ?

பக்கவாதத்தில் வகைகள் உண்டா ?

தற்காலிக பக்கவாதம், தொடர் பக்கவாதம், முற்றுப்பெற்ற பக்கவாதம் என, மூன்று வகைகளாக பிரிக்கலாம். 

தற்காலிக பக்கவாதம் :

ரத்தக் கசிவால், தற்காலிக பக்கவாதம் ஏற்படுகிறது; சில நிமிடங்களுக்கு மேல் நீடிக்காது. பாதிப்புகள், சில நிமிடங்களில் நீங்கிவிடும் என்றாலும், பிற்காலத்தில் கடும் பக்கவாதம் ஏற்பட வாய்ப்புண்டு.


தொடர் பக்கவாதம் :

தொடர் பக்கவாதம் என்பது, ரத்தக் குழாய்களில் ரத்த உறை பொருள் தோன்றுவதாலோ, மூளை புற்றுக்கட்டி பாதிப்பாலோ, மூளை உறைக்கு அடியில் ரத்தம் கசிந்து, அதன்பின் ஏற்படும் ரத்த தேக்கத்தினாலோ ஏற்படுவது. திடீரென, ரத்தக் குழாய் அடைப்போ, ரத்தக் கசிவோ ஏற்படாது; கொஞ்சம் கொஞ்சமாக, நாட்கணக்கில் பாதிப்பு தொடரும். இடையில் பாதிப்பு அதிகரித்தோ, குறைந்தோ காணப்படும்.


முற்றுப்பெற்ற பக்கவாதம் :

முற்றுப்பெற்ற பக்கவாதம் என்பது, ஓரிரு மணி நேரத்திலேயே ஏற்பட்டு விடும். எளிதில் குணப்படுத்த முடியாது. இதிலும், இரண்டு வகைகள் உண்டு.  ரத்தக்குழாயில் ஏற்படும் அடைப்பு சிறிதாக இருந்தால், பாதிப்பு சிறிய அளவிலும், ரத்தக்குழாய் அடைப்பு, ரத்தக் கசிவு பெரிய அளவில் இருந்தால், பாதிப்பு கடுமையாக இருக்கும்.

 நரம்பியல் நிபுணர் கே.பானு.

பக்கவாத நோய் (ஸ்ட்ரோக்) என்றால் என்ன ?

பக்கவாத நோய் (ஸ்ட்ரோக்) என்றால் என்ன ?

கழுத்தின் இரு பக்கங்கள் வழியாக தலைக்குச் செல்லும் கழுத்து தமனிகள், இதயத்தில் இருந்து, மூளைக்கு ரத்தத்தை கொண்டு செல்கின்றன. பெரிதாக உள்ள ரத்தக்குழாய்கள், பல கிளைகளாக பிரிந்து, நுண்ணிய ரத்தக் குழாய்களாக மாறி, மூளையின் எல்லா திசுக்களுக்கும் தேவையான பிராண வாயு, ஊட்டச்சத்துக்களை வழங்குகின்றன.

மூளைக்கு செல்லும் பெரு, சிறு ரத்தக்குழாய்களில் ரத்த ஓட்டம் குறைதல் மற்றும் தடைபடும்போது, பிராண வாயு, ஊட்டச்சத்துக்கள் கிடைப்பது தடைபட்டு, மூளையின் சில பாகங்கள் செயல் இழந்து, உடலின் சில பாகங்களும் செயல் இழக்கின்றன. இதை, பக்கவாதம் (ஸ்ட்ரோக்) என்கிறோம். மாரடைப்பு போன்று, இதை, மூளை அடைப்பு எனலாம்

- நரம்பியல் நிபுணர் கே.பானு