Sunday, 11 September 2016

'ஹார்ட் அட்டாக்'

யாருக்கு 'அட்டாக்' வரும் ?

* டென்ஷன், கட்டுப்பாடில்லாத உணவு, அளவுக்கு அதிகமான மது பழக்கம், புகை பழக்கம் உள்ளவர்களுக்கு ஹார்ட் அட்டாக் வர அதிக வாய்ப்பு உள்ளது. இன்றைய சூழலில், வயது வித்தியாசமின்றி 13 வயது முதலே ஹார்ட் அட்டாக் வருகிறது.

* உடலில் ரத்த நாளாங்களில் சேரும் கொழுப்புகள் நாளடைவில் ரத்தக்குழாயை அடைத்து, ரத்த ஓட்டத்தை தடை செய்துவிடுவதால் அட்டாக் வருகிறது. சர்க்கரை நோய், ரத்த அழுத்தம், சிறுநீரகக் கோளாறு, அதிக குடிப்பழக்கம், புகைப்பழக்கம், உடல் பருமன் மற்றும் உடல் உழைப்பு இல்லாமல் இருப்பவர்களை இந்நோய் தாக்கும்.

* மேலும், துரித உணவு வகைகள், மாமிச உணவுகளை அதிகம் சாப்பிடுபவர்களுக்கு எளிதில் ஹார்ட் அட்டாக் வரலாம். குடும்பத்தில் யாருக்காவது இந்த பாதிப்பு இருந்தாலும், வருவதற்கான வாயப்புகள் உள்ளதால் ஜாக்கிரதையாக இருப்பது நல்லது.

* புகைபிடிக்கும் போது, ரத்தத்தின் உறையும் தன்மை அதிகரித்து, கெட்ட கொழுப்பை உருவாக்குகிறது. மது அருந்தும் போது, ஆல்கஹால் கெட்ட கொழுப்புச் சத்தை அதிகரிக்கும். மதுவோடு மட்டன், சிக்கனை சுவைக்கும் போது, விரைவில் ஹார்ட் அட்டாக் ஏற்படும்.

நோய் தாக்குதல் அறிகுறிகள் :

* நம்முடைய மார்புப் பகுதியை பலமாக அழுத்துவது போன்ற கடுமையான வலி ஏற்படும். அதிக வியர்வை மற்றும் மயக்கம் வருவதுபோன்று இருக்கும். இப்படி ஏதேனும் அறிகுறிகள் தென்பட்டால், அது மாரடைப்பின் அறிகுறியாக இருக்கலாம்.
* 20 நிமிடங்களுக்குள் இந்த அறிகுறிகள் நின்றுவிட்டால், அது 'மைனர்' ஹார்ட் அட்டாக்.
* 20 நிமிடங்களுக்கு மேல் நீடித்தால் அது 'சிவியர்' ஹார்ட் அட்டாக். இதில் எந்த வகையாக இருந்தாலும், உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்குச் செல்வது நல்லது.

முதலுதவி கிசிச்சைகள் :

* ஹார்ட் அட்டாக் வந்தவர்களில் 100க்கு 10 பேரை காப்பாற்றுவது கடினம். வலி தானே, பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று அலட்சியம் செய்யக்கூடாது. மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும்போதே பாதிக்கப்பட்டவருக்கு ஆஸ்பிரின் மாத்திரையைக் கொடுக்க வேண்டும். இந்த மாத்திரை ரத்தம் உறைதலைத் தடுப்பதுடன், உறைந்த ரத்தத்தை சரிசெய்யும். அடுத்து, உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளிக்க வேண்டும்.

* எனவே, எவ்வளவு சீக்கிரம் மருத்துவமனைக்குக் கொண்டு சென்று சிகிச்சைபெற நடவடிக்கை எடுக்கிறோமோ, அந்த அளவுக்கு, உயிரை காப்பாற்ற முடியும்.

நோய் வராமல் தடுக்க :

* நோய் வந்த பின் சிகிச்சை பெறுவது ஒருபுறம் இருந்தாலும், உடற்பயிற்சி மற்றும் உணவு கட்டுப்பாடு முக்கியம். காய்கறிகள், பழங்கள் அதிகம் சாப்பிட வேண்டும். கடைகளில் விற்கும் நொறுக்குத் தீனிகள் கண்டதையும் வாங்கி சாப்பிடக் கூடாது. அசைவ உணவை அளவோடு சாப்பிட வேண்டும், குறிப்பாக, மீன் உணவை எடுத்துக்கொண்டால் நல்லது. கொழுப்பு சத்துள்ள உணவை குறைக்க வேண்டும்.
* எப்போதும் 'ரிலாக்ஸ்' ஆக இருப்பதாலும், முறையான உணவுப் பழக்கம், தினமும் உடற்பயிற்சி செய்வதன் மூலம், ஹார்ட் அட்டாகில் இருந்து நாம் தப்பிக்கலாம். 

- டாக்டர் ஆனந்தராஜ்

No comments:

Post a Comment