பக்கவாதத்தில் வகைகள் உண்டா ?
தற்காலிக பக்கவாதம், தொடர் பக்கவாதம், முற்றுப்பெற்ற பக்கவாதம் என, மூன்று வகைகளாக பிரிக்கலாம்.
தற்காலிக பக்கவாதம் :
ரத்தக் கசிவால், தற்காலிக பக்கவாதம் ஏற்படுகிறது; சில நிமிடங்களுக்கு மேல் நீடிக்காது. பாதிப்புகள், சில நிமிடங்களில் நீங்கிவிடும் என்றாலும், பிற்காலத்தில் கடும் பக்கவாதம் ஏற்பட வாய்ப்புண்டு.
தொடர் பக்கவாதம் :
தொடர் பக்கவாதம் என்பது, ரத்தக் குழாய்களில் ரத்த உறை பொருள் தோன்றுவதாலோ, மூளை புற்றுக்கட்டி பாதிப்பாலோ, மூளை உறைக்கு அடியில் ரத்தம் கசிந்து, அதன்பின் ஏற்படும் ரத்த தேக்கத்தினாலோ ஏற்படுவது. திடீரென, ரத்தக் குழாய் அடைப்போ, ரத்தக் கசிவோ ஏற்படாது; கொஞ்சம் கொஞ்சமாக, நாட்கணக்கில் பாதிப்பு தொடரும். இடையில் பாதிப்பு அதிகரித்தோ, குறைந்தோ காணப்படும்.
முற்றுப்பெற்ற பக்கவாதம் :
முற்றுப்பெற்ற பக்கவாதம் என்பது, ஓரிரு மணி நேரத்திலேயே ஏற்பட்டு விடும். எளிதில் குணப்படுத்த முடியாது. இதிலும், இரண்டு வகைகள் உண்டு. ரத்தக்குழாயில் ஏற்படும் அடைப்பு சிறிதாக இருந்தால், பாதிப்பு சிறிய அளவிலும், ரத்தக்குழாய் அடைப்பு, ரத்தக் கசிவு பெரிய அளவில் இருந்தால், பாதிப்பு கடுமையாக இருக்கும்.
- நரம்பியல் நிபுணர் கே.பானு.

No comments:
Post a Comment